×
 

மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாக கனிமொழி எம். பி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுத தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தீர்வை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியே கூறினால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தீர்ப்பு என்றும் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுத தண்டனை விதிக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: #BREAKING: சாகும்வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய கனிமொழி, முதல்வர் ஆட்சி பொறுப்பிற்கு முன்னரே பெண்களுக்கு நியாயம் பெற்றுத் தருவோம் எனக் கூறியிருந்தார் என்றும் இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தரப்பட்டுள்ளது., இந்த நீதி நிலை நிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ய அரசு போராடும் என்றும் கனிமொழி எம்.பி.தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீதிபதி மாற்றத்தால் குழப்பம்..! பொள்ளாச்சி வழக்கில் திட்டமிட்டபடி மே 13-ல் தீர்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share