×
 

மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி.. விமர்சித்த திமுக எம்.பி கனிமொழி..! பரபர பதிவு..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூருக்கு சென்றுள்ள நிலையில் திமுக எம்.பி கனிமொழி இந்த பயணத்தை விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூருக்கு வருகை தந்துள்ளார். இது 2023ஆம் ஆண்டு இன வன்முறை வெடித்த பிறகு அவர் மாநிலத்துக்கு முதல் முறையாக வருகை தருவதாகும். மிசோரம் தலைநகர் ஐசாவலில் இருந்து இன்று காலை மணிப்பூர் வந்தடைந்தார்.

இம்பால் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா மற்றும் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து சுரச்சந்த்பூருக்கு சென்ற அவர், அங்கு உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து பேசினார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

இதையும் படிங்க: வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த பஞ்சாப், இமாசல பிரதேசம்.. நாளை நேரில் செல்கிறார் பிரதமர் மோடி..!!

தொடர்ந்து சுரச்சந்த்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் அடங்கும். மேலும், இம்பாலில் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் திட்டங்களையும் அவர் திறந்து வைத்தார். 

இதனிடையே பிரதமர் மோடி நேற்று மணிப்பூர் பயணம் குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் நாளை (செப்.13) மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மற்றும் இம்பாலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். மணிப்பூரின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நாங்கள் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம்.

மணிப்பூரில் பல்வேறு சாலைத் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மகளிர் விடுதிகள் மற்றும் பலவற்றிற்கு அடிக்கல் நாட்டப்படும். மந்திரிபுக்ரியில் உள்ள சிவில் செயலகம், ஐடி சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம் மற்றும் மந்திரிபுக்ரியில் உள்ள புதிய காவல் தலைமையகம் உள்ளிட்ட கட்டிடங்கள் திறக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் தொடர்பான பதிவை மேற்கோள் காட்டி கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்பதை அவருக்கு நினைவூட்டுவதில் மனிதாபிமானம் தோற்றுவிட்டது. 2027 மணிப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் அதில் வெற்றி பெற்றுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாட புத்தகத்தில் ISRO வரலாறு!! தொலைநோக்கு பார்வைக்கு சரியான எடுத்துக்காட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share