சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்கு செலுத்திய பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.
மக்கள் சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி நிச்சயமாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார். இன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வருகிறது. ஆழ்வார்பேட்டையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார். மக்கள் நிச்சயமாக தெளிவான முடிவை எடுப்பார்கள் என்று தெரிவித்தார். மக்களை சந்தித்த பிறகு உறுதியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடரும் என்பது உறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை காக்கும் கேடயம்..! தவறாமல் ஓட்டுப் போடுங்க..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!
நிச்சயமாக ஒரு சிறப்பான வெற்றியை திமுக கூட்டணி பெறும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து வாக்குகளும் எண்ணிய பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அதிகமாக மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனநிலையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். உங்களுடைய எதிர்காலத்திற்கு எது நல்ல ஆட்சியாக இருக்கும் என்பதை பற்றி சிந்தித்து வாக்களியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு வாக்குப்பதிவு..! தமிழ்நாடு வெல்லும்..! வாக்கு செலுத்தியப்பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி..!