திமுகவில் புதிய கட்சிகள் இணையும்..! WAIT AND SEE...! எம்.பி கனிமொழி உறுதி..!
நெல்லையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையிலான கூட்டணி என்பது நீண்ட வரலாறு கொண்டது. இரு கட்சிகளும் பல தேர்தல்களை ஒன்று சேர்ந்து எதிர்நோக்கி வெற்றிகளை பார்த்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சந்திக்கும் என்று கூறப்பட்டாலும் கூட இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. எத்தனை தொகுதிகள் காங்கிரஸ் கேட்கிறது என்பது குறித்தும் எந்த விவரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நெல்லையில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டீர்களா என கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
நான் சந்தித்து கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏற்கனவே வலுவாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் தொடர்பான கூட்டணியில் எந்த மோதலும் இல்லை என்றும் கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்தார். காங்கிரஸ் உடனான திமுகவின் கூட்டணி சமூகமாக இருக்கிறது என்றும் திமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தஞ்சையில் "வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு"... முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!
திமுகவில் பல புதிய கட்சிகள் இணையும் என்றும் எந்த கட்சி கூட்டணிகள் இணையும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கருத்துக்கணிப்புகள் வந்தாலும் வரவில்லை என்றாலும் தேர்தல் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை தான் கண் கூடாக பார்ப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்..!