ரயிலில் கஞ்சா... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்... லாடம் கட்டிய போலீஸ்...!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைய காலகட்டத்தில் போதைப்பொருட்கள் என்பது வெறும் அச்சுறுத்தலாக மட்டுமல்ல, தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. போதைப் புழக்கத்தில், OG கஞ்சா என்பது உயர்தர, தூய்மையான அல்லது அசல் வகை கஞ்சாவைக் குறிக்கும் – இது வெளிநாட்டு செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டு, அதிக THC (டெட்ராஹைட்ரோகனாபினால்) அளவைக் கொண்டிருக்கும்.
இந்தப் புழக்கத்தின் விளைவுகள் ஆபத்தானவை. உடல்நலம் ரீதியாக, OG கஞ்சா போன்ற உயர்தர வகைகள் THC அளவு அதிகமாக இருப்பதால், மூளையின் செயல்பாட்டை பாதிக்கின்றன. குறிப்பாக 17 வயதுக்கு முன் தொடங்கினால், நினைவாற்றல் குறைவு, மனநோய், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். இளம் வயதில் உட்கொள்ளல் மூளையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. சமூக ரீதியாக, இது குடும்பங்களை சீரழிக்கிறது.
பெற்றோர்களின் போதை பழக்கம் குழந்தைகளுக்கு மரபணு ரீதியாகவும் பரவுகிறது. பல்வேறு குற்றங்களுக்கும் வழி வகுக்கிறது. இந்த நிலையில் ரயிலில் கஞ்சா கடத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெரிய பார்சல் உடன் வந்த நபர்களை சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து தாக்கும் போதை ஆசாமிகள்... போலீஸ் கண்டுக்கல?.. மறியலில் குதித்த மக்கள்...!
அப்போது அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. எட்டு கிலோ கஞ்சா சிக்கிய நிலையில் அதனை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்ரான் கான், கார்த்திக் ராஜ், பூ பாண்டி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடுமை...! எந்த கொடுஞ்செல்லும் போதாது... கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...!