பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!
சென்னையில் பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது இன்றைய இந்திய சமூகத்தில் மிகுந்த கவலை அளிக்கும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது வெறும் தனிப்பட்ட பழக்கமாக மட்டுமல்லாமல், இளம் தலைமுறையின் உடல், மன, கல்வி மற்றும் சமூக வளர்ச்சியை பாதிக்கும் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.
சமீப காலங்களில் பள்ளி மாணவர்களிடையே அதன் புழக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. தேசிய அளவிலான ஆய்வுகளின்படி, 2019இல் வெளியான அறிக்கையில் 10-17 வயது குழந்தைகளிடையே கஞ்சா பயன்பாடு சுமார் 0.9% என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டில் கஞ்சா பயன்பாடு 2% அளவுக்கு இருப்பதாகக் காட்டுகிறது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்திலும் கஞ்சா பயன்பாடு மாணவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. பள்ளிக்கு கஞ்சா கொண்டு செல்லும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. சென்னை வியாசர்பாடியில் 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளிக்கு கஞ்சாவை எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனையில் திமுக நிர்வாகி கைது... கஞ்சா கடத்தல் மையம் தமிழ்நாடு..! TTV தினகரன் குற்றச்சாட்டு..!
அரசு பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவர் இடுப்பில் வைத்து கஞ்சா கொண்டு சென்றுள்ளார்.பள்ளிக்கு கஞ்சா கொண்டு வந்ததை தலைமை ஆசிரியர் கண்டுபிடித்து உள்ளார். உடனடியாக மாணவனை பிடித்து காவல்துறையிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைத்து உள்ளார். போலீசார் 11 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்துள்ளனர். மாணவனுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது, எங்கிருந்து கொண்டு வந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதையால் கொடூர கொலைகள்... சீரழியும் இளைய தலைமுறை... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!