×
 

#BREAKING: கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் அதிரடி கைது..! 20 நாட்களாக போலீஸ்க்கு தண்ணி காட்டிய சம்பவம்..!!

பாலியல் புகாரில் கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கண்ணகி நகரில் உள்ள கபடி அணியின் இளம் வீராங்கனை ஒருவர், தனது பயிற்சியாளர் ராஜூ மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுடன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கபடி பயிற்சியாளர் ராஜு கொடைக்கானலில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். கண்ணகி நகர் கபடி அணி சமீப காலமாக தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வரும் பின்னணியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புகாரின்படி, பயிற்சியாளர் ராஜூ தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, வீராங்கனையை மிரட்டியுள்ளார். “தனது ஆசைக்கு இணங்கினால் மட்டுமே போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும்” என்று கூறி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கபடி பயிற்சி தொடர்பான நேரங்களில் நடைபெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீராங்கனை துணிச்சலுடன் முன்வந்து புகார் அளித்துள்ளதால், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுlது. 

கண்ணகி நகர் கபடி அணி பல ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இளம் வீராங்கனைகளான கார்த்திகா உள்ளிட்டோர் சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்கள் வென்று கண்ணகி நகருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக ராஜூ செயல்பட்டு வருகிறார். அவர் பல இளம் பெண் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றதாக முன்பு பல பாராட்டுகள் கிடைத்திருந்தன.

இதையும் படிங்க: ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

ஆனால் தற்போதைய புகார் அந்தப் பிம்பத்தை கேள்விக்குறியாக்கியது. தனது குழுவில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் 20 நாட்களுக்கும் மேலாக போலீசார் கபடி பயிற்சியாளர் ராஜுவை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போக்சோ வழக்கில் கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜுவை கொடைக்கானலில் வைத்து செம்மஞ்சேரி போலீசார் கைது செய்து இருக்கின்றனர். பாலியல் புகார் காரணமாக தலைமறைவாக இருந்த கபடி பயிற்சியாளர் ராஜு தற்போது கைது செய்யப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதையும் படிங்க: "ரூ. 10 ஆயிரம் லஞ்சம்"... கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்.! தட்டித் தூக்கிய அதிகாரிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share