×
 

தமிழ்நாட்டில் இப்படியா?... பொதுவெளியில் அலட்சியமாக துப்பாக்கியால் சுட்ட தொழிலபதிபர்... அடுத்து நடந்த அதிர்ச்சி...!

தன் கையில் வைத்து இருக்கும் கைத்துப்பாக்கி கொண்டு  சுடும் வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளார்.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பொது வெளியில் துப்பாக்கி சூடு. இது குறித்து 
வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவு. விடியோ வைரல். இது தொடர்பாக தொழில் அதிபர் கைது.

 குமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த புதுகிராமத்தை சேர்ந்தவர் அர்னால்டு அரசு.தொழில் அதிபரான இவர் பொது வெளியில் கைத்துப்பாக்கியில் எப்படி தோட்டாக்கள் போட வேண்டும் பின்னர் எவ்வாறு டிகரை அழுத்தி சுட வேண்டும் என்பது குறித்து விளக்கமாக பொது வெளியில் நின்று கொண்டு தன் கையில் வைத்து இருக்கும் கைத்துப்பாக்கி கொண்டு  சுடும் வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளார்.இந்த விடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விடியோ பெரும்  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது குறித்து கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் நடத்திய விசாரணையில், அர்னால்ட் அரசு ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருந்ததும், அவருக்கு கோவையை சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கி கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: வேட்டைக்கு போன இடத்தில் விபரீதம்... 22 வயது இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாபம்... திண்டுக்கல்லில் நடந்தது என்ன?

இதனை தொடர்ந்து மேலும் தொடர்ந்த விசாரனையில்  அர்னால்ட் அரசு எந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்தினார்.அவர் துப்பாக்கி வைத்து கொள்ள அவருக்கு முறையாக அனுமதி உள்ளதா?.ஏன் பொதுவெளியில் துப்பாக்கி சூடு நடத்தினார்? என்பது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக் குப்பதிவு செய்து அர்னால்ட் அரசுவை கைது செய்தனர்.மேலும் இவருக்கு துப்பாக்கி கொடுத்தாக கூறப்படும் விமா னப்படை அதிகாரியையும் தேடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: #BREAKING கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக்கொலை... வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு... FIR-ல் முக்கிய ட்விஸ்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share