×
 

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு.

குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே சிராயன்குழி பகுதியில் செயல்படும் ஒரு உணவகத்தில் சதீஷ்குமார் (வயது21), கிருஷ்ண குமார்(20),ரந்தித் குமார் (20) ஆகிய மூன்று பேர் வேலை பார்த்து வந்தனர். பீகார் மாநிலத்தை  சேர்ந்த இவர்கள் 3 பேரும், கடை இருந்த பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். 

அவர்கள் இன்று அதிகாலை எருதூர்கடையில் இருந்து தக்கலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களது மோட்டார் சைக்கிள் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்தது. 

அப்போது எதிரே ஈரோட்டில் இருந்து கேரளம் மாநிலத்துக்கு கோழிக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியின் மீது பீகார் வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர் களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்  மற்றும் தீயணைப்பு துறையினர்  நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த  உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share