×
 

ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்த பெண்! பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல்! இருவர் கைது!

கடந்த ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை காரைக்குடிக்கு வரவழைத்த அந்தப் பெண், தனிமையில் இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பைனான்ஸ் அதிபரை காதல் வலையில் சிக்கவைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண் ஒருவரும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் (40) என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் அவரை கைபேசியில் தொடர்புகொண்ட கவிதா என்ற பெண், நயமாக பேசி நட்பு வளர்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, ஜூன் 9-ஆம் தேதி ஜிபே மூலம் ரூ.4,500 பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர், ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை காரைக்குடிக்கு வருமாறு அழைத்த கவிதா, தனிமையில் பேசலாம் என்று கூறி பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காங்., தோத்ததுக்கு காரணம் சிதம்பரமும், அவரு மகனும் தான்! உண்மை கண்டறியும் குழுவிடம் கட்சியினர் புகார்!

அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கும்பல் திடீரென வடிவேலை தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டு, ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டியதுடன், அவரிடம் இருந்த ஹோண்டா இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் பறித்துச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கவிதா மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற மூன்று பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைபேசி மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share