கன்னிமாராவில் கார்ல் மார்க்ஸ்... முழு உருவச் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!
கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் முழு உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் முழு உருவச் சிலையை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த சிலை அமைக்கப்பட்டதற்கான அறிவிப்பு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் 2025 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த சிலை அமைக்கும் யோசனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார். கார்ல் மார்க்ஸ் நூலகங்களை அதிகம் பயன்படுத்தியவர் என்பதால், கன்னிமாரா நூலக வளாகத்தில் இந்த சிலை அமைக்கப்படுவது குறியீட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
இது திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளுடன் இணைந்து, சமூக நீதி, சமத்துவம், தொழிலாளர் உரிமைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது. சென்னை அருங்காட்சிய வளாகத்தில் உள்ள கன்னிமார நூலகத்தின் கார்ல் மார்க்ஸ் திருவருவ சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!
85 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட கார்ல் மார்க்ஸ் திருவருட்சினை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், சிலையை திறந்து வைப்பதுடன் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸின் புகைப்பட சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் இடதுசாரி கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலாளர் இயக்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு, முதலமைச்சர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!