×
 

காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!

கர்நாடகா கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள கபினி அணைக்கு கேரளாவின் வயநாடு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு சுமார் 15,675 கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழு கொள்ளளவு 2,284 அடி ஆகும். தற்போது நீர்மட்டம் 2,280.94 அடியை எட்டியுள்ளது.

அதாவது முழு கொள்ளளவுக்கு வெறும் நான்கு அடி மட்டுமே குறைவாக உள்ளது. அணையின் மொத்த சேமிப்புத் திறன் 19.52 டி.எம்.சி. ஆகும். தற்போது சுமார் 17.6 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பும் நிலைக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நீர் திறப்பை தொடங்கியுள்ளனர். தற்போது வினாடிக்கு 5,000 கன அடி அளவுக்கு தண்ணீர் கபினி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மழை தொடர்ந்து பெய்து நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த அளவு 8,000 முதல் 10,000 கன அடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அணை அதிகாரிகள் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றங்கரை பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் மேகதாது பிரச்சனை..! மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்... மத்திய அரசுக்கு அழுத்தம்..!!

இந்த நீர்வரத்து அதிகரிப்பு காவிரி நீர் பங்கீடு தொடர்பான சர்ச்சைக்கு இடையே ஒருவித நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணையை அடையும். ஆற்றின் பாதை தற்போது வறண்ட நிலையில் இருப்பதால் சில இழப்புகள் ஏற்படலாம் என்றாலும், இரண்டு முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: மேகதாது பிரச்சனை... குரல் கொடுக்கும் திமுக... நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share