விஜய் சொல்லிட்டாரு... கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு...!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்ச ரூபாயும், மத்திய அரசின் சார்பில் 2 லட்ச ரூபாயும், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை, நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் வழங்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களைத் திரட்டி, காசோலையாக வழங்கலாமா அல்லது நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தலாமா என்ற பணிகளில் நமது நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CM SIR என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிடுமா? கி.வீரமணி ஆவேசம்...!
இந்த சூழ்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டு உள்ளதாகவும் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிக்கலில் ஆதவ் அர்ஜுனா… காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு? அரசியலில் பரபரப்பு…!