×
 

அய்யோ! பிணவறையை பார்க்கும்போதே…. உடைந்து அழுத கரூர் எம்.பி. ஜோதிமணி…!

பிணவரையை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது என கருர் எம்.பி. ஜோதிமணி உடைந்து அழுதார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது.

இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் இதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை என்றும் இந்த துயரச் சம்பவம் மனதை உலுக்குகிறது எனவும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் பலர் கூலி வேலை செய்பவர்கள் என்றும் நிற்கதியாய் நிற்பவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றும் உடைந்து அழுதார்.

இதையும் படிங்க: தாங்க முடியல… எல்லாரும் என் கண்ணுக்கு முன்னாடியே… நேரலையில் உடைந்து அழுத செய்தியாளர்…!

தமிழக வெற்றி கழகத்தினர் கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருந்தால் நிலைமை என்னும் மோசமாக இருந்திருக்கும் எனவும் கூறினார். பிணவறையை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: #BREAKING: கரூர் துயரச்சம்பவம்... எங்க மேல தப்பு இல்ல... தவெக வழக்கறிஞர்கள் பரபரப்பு பேட்டி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share