கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி… கரூருக்கு நிர்மலா சீதாராமன் DIRECT VISIT…!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசின் சார்பில் 10 லட்ச ரூபாயும், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் 20 லட்ச ரூபாயும், மத்திய அரசின் சார்பில் இரண்டு லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்ததும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கரூருக்கு விரைந்தனர். கரூரின் நிலைமை குறித்து கேட்டு அறிந்ததுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர். மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் நிகழாது இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நிர்மலா சீதாராமன் உட்பட ஏராளமானோர் கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருப்பதிக்கு ஒரு விசிட்.. புன்னகையுடன் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய நிர்மலா சீதாராமன்..!!
இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பாகவும் இந்த கூட்ட நெரிசல் எப்படி நடந்தது என்பது தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: அடிதூள்...!! இனி ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்...எந்தெந்த பொருட்களின் விலை குறையும்...!