விஜய் மேல CASE போடல! வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்...!
கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் நடந்த துயரச் சம்பவம் போல் மீண்டும் ஒரு நிகழ்வு நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளையும் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ரோடு சோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை என்றும் அவர் ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு சோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஒதுக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பான நீதிமன்றங்கள்.. டெல்லி, மும்பை கோர்ட்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்..!!
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிட வலியுறுத்தியும், கரூர் துயர சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என்.செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: தவெக கட்சியே இல்ல... என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு கார்த்தி சிதம்பரம்...?