×
 

Karur Stampede! சிசிடிவி, ட்ரோன் ஆதாரங்கள் எங்கே?! த.வெ.க. நிர்வாகிகளை குறி வைக்கும் போலீஸ்!

கரூர் கூட்டத்தில் விஷமிகள் உள்ளே நுழைந்து ஏதேனும் விபரீதமான செயலில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரிக்க, ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ள ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கரூர் மாவட்ட போலீசார் கடிதம் வாயிலாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இதில் த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கரூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. 

மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அலுவலகத்தில் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். விஜயின் கேரவான் CCTV காட்சிகளை கேட்டுள்ளனர். தலைமறைவான நிர்மல் குமாரின் உதவியாளர் சதீஷ் குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 27 மாலை, கரூர் வேலுச்சாமி புரத்தில் நடந்த த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில், 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். 10,000 பேருக்கு அனுமதி இருந்தபோதிலும், விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள், 17 பெண்கள், 13 ஆண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று திரும்பினர். த.வெ.க. தரப்பினர், "காவல்துறை பாதுகாப்பு இல்லாததே காரணம்" என்று குற்றம் சாட்ட, தி.மு.க.வினர் "தவெக நிர்வாக குறைபாடு" என்று பதிலளித்தனர்.

இதையும் படிங்க: Karur stampede! விஜயின் அடுத்தக்கட்ட மூவ்! 3 நாள் ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

கரூர் நகர போலீஸ், த.வெ.க. பொதுச் செயலாளர் 'பஸ்ஸி' ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி. மதியழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. கூட்ட நிர்வாகத்தில் அலட்சியம், போலீஸ் உத்தரவுகளை மீறல், மனித உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தல் (BNS 304A, 188) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு. 

மதியழகன், தெற்கு நகரப் பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறை உத்தரவு பெற்றுள்ளனர். ஆனந்த், நிர்மல் குமாருக்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேடுதல் நடக்கிறது.

த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, விஜய் கூட்டங்களின் ஒருங்கிணைப்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகம் செய்கிறார். அவர், கரூர் கூட்டத்தில் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து ஆவணப்படுத்தினார். இதனால், போலீஸ் அவரது அலுவலகத்தில் (சென்னை போய்ஸ் கார்டன்) நேற்று (அக்டோபர் 1) விசாரணை நடத்தினர். 

நெரிசல் ஏற்பட்டது எப்படி, விஷமிகள் நுழைந்தார்களா என்பதை விசாரிக்க, ஆதவ் அர்ஜூனாவிடம் உள்ள ஆதாரங்களை (ட்ரோன் வீடியோக்கள்) ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர். தேவைப்பட்டால் ஆஜராகுமாறும் உத்தரவு.

மேலும், சென்னை வடக்கு மண்டல சைபர் குற்றப் பிரிவு, ஆதவ் அர்ஜூனா மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பதிவு உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை கைது செய்ய தீவிரம் காட்டுகின்றனர். அர்ஜூனா, ஸ்ரீலங்கா, நேபாள போராட்டங்களை குறிப்பிட்டு "ஜென் ஜி போராட்டம்" என்று பதிவிட்டதை டெலிட் செய்தாலும், சமூக வலைதளங்களில் விவாதம் நீடிக்கிறது.

தலைமறைவான இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரின் உதவியாளர் சதீஷ் குமார், சென்னையில் விசாரிக்கப்பட்டார். போலீஸ், "நிர்மல் குமார் கடைசியாக உங்களிடம் பேசினார்? போனை ஏன் சுவிட் ஆஃப் செய்தீர்கள்?" என்று கேட்டு, பதில்களை வீடியோ பதிவு செய்தனர். நிர்மல் குமார், சென்னையில் வசிக்கிறார். மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி, 3 தனிப்படைகளை அமைத்து, ஆனந்த், நிர்மல் குமாரை தேட உத்தரவிட்டுள்ளார்.

கரூர் போலீஸ், விஜயின் கேரவான் (வாகனம்) பதிவான CCTV காட்சிகளை கேட்டுள்ளது. கூட்டத்தில் விஜய் பேசிய போது நடந்த நிகழ்வுகளை ஆராய, இது உதவும் என கூறுகின்றனர். த.வெ.க. தரப்பு, "தி.மு.க. சதி" என்று குற்றம் சாட்டி, மதுரை உயர் நீதிமன்றத்தில் CBI/SIT விசாரணை கோரி மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு அதிகாரிகள், செய்தியாளர்களிடம், "போலீஸ் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்தது. த.வெ.க. 10,000 பேருக்கு அனுமதி கேட்டு, 25,000 பேரை திரட்டியது" என்று விளக்கினர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "சம்பவம் வேதனைக்குரியது. போலீஸ் எச்சரிக்கை அளித்தும், த.வெ.க. புறக்கணித்தது" என்று கூறினார். கரூர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் தலைவர் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

விஜய், செப்டம்பர் 28 அன்று வீடியோ வெளியிட்டு, "இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. 2 வாரங்களுக்கு மக்கள் சந்திப்புகளை ஒத்திவைக்கிறேன்" என்று அறிவித்தார். இன்று (அக்டோபர் 2) மூன்றாவது நாளாக, பட்டினப்பாக்கம் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 பலியான 41 குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் உதவியை வழங்கும் நடைமுறை, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது குறித்து விவாதம் செய்ததாக தகவல்கள். த.வெ.க. தரப்பு, விஜய்க்கு பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கரூர் சென்று ஆறுதல் கூற திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசு, ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. அவர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, காயமடைந்தவர்களை சந்தித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், "ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று உறுதியளித்தார். இந்த துயரம், த.வெ.க.வின் அரசியல் பயணத்தை பாதிக்கலாம். ஆனால் விஜய், "அரசியல் தொடரும்" என்று உறுதியளித்துள்ளார். போலீஸ் விசாரணை தொடர்கிறது.

இதையும் படிங்க: விஜயும் கைதாக வாய்ப்பா? தவெக நிர்வாகிகளை தட்டி தூக்கும் போலீஸ்! புஸ்ஸி ஆனந்த்தை தொடரும் சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share