கரூர் பெருந்துயரம்... விடிந்ததுமே கையில் 3D டிஜிட்டல் ஸ்கேனருடன் களத்தில் இறங்கிய சிபிஐ
இரண்டாவது நாளான இன்று அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட 3D டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் சம்பவ இடத்தை மிகத் துல்லியமாக அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி யில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 109, 110, 125 ,223 என 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் கரூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 17ஆம் தேதி முதல் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் நேற்று மதுரை சிபிஐ அலுவலகத்தில் இருந்து 6 சிபிஐ அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர். மொத்தம் 12 சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ முன் ஆஜர் ஆவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மதிவண்ணன் ஆவணங்களுடன் ஆஜராக வந்தார். 41 பேர்கள் உயிரிழ்ந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த விசாரணை அதிகாரியான கரூர் நகர ஆய்வாளர் மணிவண்ணனிடம் முதல் கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர்.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே விஜய்-க்கு செம்ம ஷாக்... 15 நாட்களுக்கு பிறகு கரூர் வழக்கில் சிபிஐ-ன் அதிரடி மூவ்...!
அதனைத் தொடர்ந்து நேற்று சிபிஐ அதிகாரிகள், காவல் துறை அதிகாரி, போட்டோகிராபர், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டனர். பல கடைகளில் உள்ள சிசி டிவி பதிவுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டு கொண்டனர். தொடர்ச்சியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள், சிபிஐயில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் என ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட 3D டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் சம்பவ இடத்தை மிகத் துல்லியமாக அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் முதல் நாளான நேற்று 300 மீட்டர் தூரத்திற்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலமாக அளவிடும் பணிகள் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்று 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோதி தலைமையிலான சிறப்பு குழுவின் ஐபிஎஸ் அதிகாரி சுமித்சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் இன்று கரூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: களமாடும் விஜய்... மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்... ஆட்டம் ஆரம்பம்...!