கரூர் சம்பவத்தில் அடுத்த பாய்ச்சல்... சிபிஐ முன் ஆஜரான 5 முக்கிய போலீஸ்... தவெக நிர்வாகிகளை என்ன செஞ்சாங்க தெரியுமா?
தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் நேற்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், காவலர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கரூர் துயரச் சம்பவம் - சிபிஐ அலுவலகத்தில் காவலர்கள் அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.2 காவல் ஆய்வாளர், 3 உதவி ஆய்வாளர் என ஐந்து காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக எஸ் ஐ டி குழுவினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் கரூர் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் காவல்துறையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதேபோன்று பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் நேரில் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: "கரூர் பெருந்துயரம்"..! மீண்டும் விசாரணையை முடுக்கிய சிபிஐ..! களமிறங்கிய அதிகாரிகள்..!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் நேற்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், காவலர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சம்பந்தப்பட்ட கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளரும், தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தவருமான மணிவண்ணன் ,காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் உதவி ஆய்வாளர் ஆர்த்தி, ரூபினி, சித்ராதேவி என 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
தேர்தலுக்குப் பிறகு கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், பல்வேறு காவலர்கள் அடுத்தடுத்து விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!