×
 

#BREAKING: கரூர் கோரச் சம்பவம்... தமிழக அரசுக்கு 8 வாரம் தான் டைம்... உச்ச நீதிமன்றம் உத்தரவு...!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையிட இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என்றும் உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் மனுக்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. SIT அமைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு உட்பட 4 வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, SIT விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கையை நீதிபதி தலைமையிலான குழுவிடம் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: கரூர் அவதூறு... தவெக நிர்வாகிக்கு அக். 24 வரை காவல்... சிறையில் அடைத்த போலீஸ்...!

ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு எட்டு வாரங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: விஜய் பாவம்யா... கூட விஸ்வாசிகள் இருந்திருந்தா… தாடி பாலாஜி சர்ச்சை கருத்து…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share