×
 

#BREAKING! டாக்டர்ஸ் உடனே கரூர் வாங்க! பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல பீஸ் வாங்காதீங்க! பறக்கும் உத்தரவு!!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக நாமக்கல், சேலம் மாவட்ட மருத்துவர்கள் வரவழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் நடிகர் விஜயின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மருத்துவ உதவிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரூரில் TVK தலைவர் விஜயின் பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, வேலுசாமிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர். அனுமதிக்கப்பட்ட 10,000 பேர் என்ற எண்ணிக்கையை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 31 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்து, 46 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 12 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலினின் உத்தரவைத் தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மருத்துவ ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31. கூடுதல் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்க, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் முழு அளவில் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: குடை எடுத்தாச்சா! இன்று 21 மாவட்டங்களில் கனமழை! உங்க ஊரும் இருக்கா? லிஸ்ட் பாருங்க!

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான மருந்துகள், உபகரணங்கள் உள்ளன,” என்றார்.

முதல்வர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர், காவல் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைகளை உறுதி செய்தார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனைகளுக்கு வருகை தந்து நிலைமையை ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் பாஜக தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இரவே கரூருக்கு நேரில் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவில் ‘புஷ்பா 2’ திரைப்படக் காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது போல, விஜய் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுகின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

இந்த சம்பவம், பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு மற்றும் முறையான ஏற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திடீரென வெடித்து சிதறிய கேஸ் டேங்கர் லாரி! அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த 18 வாகனம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share