டெல்லியில் முகாமிட்டுள்ள ஆதவ்! தவெக-வின் அடுத்த மூவ்? களமிறங்கும் டெல்லி!
த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு படையினருடன், ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுஉள்ளதால், திடீர் பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் செய்தி தொடர்பு பிரிவு துணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். ஆனந்த், புதுச்சேரியில் முக்கிய புள்ளி ஒருவரின் அரசு பங்களாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரைக் கைது செய்ய முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.
இந்நிலையில், த.வெ.க. பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதள பக்கத்தில், “இலங்கை, நேபாளம் போல மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்” என பதிவிட்டதற்காக, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக - தவெக இடையில் ரகசிய டீலிங்! சாயம் வெளுத்திருச்சு! திடீர் ட்விஸ்ட் அடிக்கும் திருமா!
இதனையடுத்து, ஆதவ் அர்ஜுனா, விஜய் ஏற்பாடு செய்த தனி விமானத்தில், அக்டோபர் 1 ஆம் தேதி சென்னையிலிருந்து டில்லி சென்றுள்ளார். அவருடன் சென்ற ஐந்து பேரில் இருவர், விஜய்யின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் என கூறப்படுகிறது. இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி, த.வெ.க. உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளது. இதற்காக, ஆதவ் அர்ஜுனா டில்லியில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி மற்றும் கபில் சிபில் ஆகியோரை சந்தித்து பேச முயற்சிக்கிறார்.
இவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், வேறு மூத்த வழக்கறிஞரை அணுகவும் திட்டமிட்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய புள்ளியை சந்திக்கவும் ஆதவ் அர்ஜுனா சென்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சம்பவங்கள் த.வெ.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் இது குறித்து தீவிர விவாதங்கள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: பாஜக சொல்றதைத் தான் விஜயும் சொல்லுறார்! சங் பரிவார்களின் சதிவலை! எச்சரிக்கையா இருங்க! திருமா விளாசல்!