தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்.. அனல் பறக்கும் சிபிஐ விசாரணை... விஜய் ஆஜராக புதிய சம்மன்..!!
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மார்ச் 15ஆம் தேதி விஜய் ஆஜராக புதிய சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆஜராக வேண்டிய மாற்று தேதி குறித்து பரிசீலித்து சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை முதலில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை தொடங்கிய பின்னர், விஜய் ஜனவரி மாதத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இரண்டு முறை ஆஜராகி விளக்கம் அளித்தார். முதல் முறை ஜனவரி 12ஆம் தேதியும், இரண்டாவது முறை ஜனவரி 19ஆம் தேதியும் ஆஜரான அவரிடம் சுமார் 6-7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இது இறுதிக் கட்ட விசாரணை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விசாரணையில் சில கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதாகக் கருதிய சிபிஐ, மார்ச் 2026இல் மீண்டும் புதிய சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இது மூன்றாவது முறை சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் தரப்பில் இருந்து உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. கட்சி வேட்பாளர் நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக அன்று ஆஜராக இயலாது என்று தெரிவித்து, 15 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையும் படிங்க: கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!
மேலும், விசாரணையை சென்னை அல்லது தமிழகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை சிபிஐ பரிசீலித்து, மாற்று தேதியை அறிவித்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, மார்ச் 15ஆம் தேதி விஜய் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது டெல்லி அலுவலகத்தில் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், விஜய் தரப்பு தமிழகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் டெல்லிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்..!! சிபிஐ அதிரடி..!!