×
 

#BREAKING: விஜய் பிரச்சாரம் திட்டமிட்டே தாமதம்... எதற்கு தெரியுமா? FIR-ல் பகீர் தகவல்...!

திட்டமிட்டே விஜயின் பிரச்சாரம் தாமதம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

கரூர் கோரச் சம்பவம் மனதில் நீங்காத வடுவாக மாறியது. வரலாற்றுப் பெரும் கொடுமையாக உருவெடுத்துள்ளது. விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

உற்சாகத்துடன் தொடங்கிய விஜயின் சுற்றுப்பயணம் சோகக் கடலில் மூழ்கியது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களை விஜயோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளோ சந்திக்கவில்லை என்றும் மக்கள் மீது அக்கறை இல்லையா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: #BREAKING: திடீர் மனமாற்றம்... இரவோடு இரவாக தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காதே என்றும் விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். காவல்துறையினர் முழு பாதுகாப்பு அளித்ததாகவும் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திட்டமிட்டே விஜயின் பிரச்சாரம் தாமதமாக்கப்பட்டதாக எஃப்ஐஆர்- ல் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் அரசியல் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பிரச்சாரம் தாமதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் தொண்டர்களை தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் சரியாக ஒழுங்குபடுத்தவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தப்பட்டதாகவும், பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் சோர்வடைந்து, உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் மிதிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், பலர் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம்  துரதிர்ஷ்டவசமானது... பெருஞ்சோகத்துடன் பிரதமர் மோடி இரங்கல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share