கவினும் நானும் உயிருக்கு உயிரா காதலிச்சோம்! சுபாஷினியின் பரபரப்பு வீடியோ...
தானும் கவினும் உண்மையாக உயிருக்கு உயிராக காதலிப்பதாக சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி என்ற பெண்ணின் சகோதரன் சுர்ஜித் கவினை வெட்டி படுகொலை செய்துள்ளார்.
சுபாஷினி மற்றும் கவின் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தனக்கும் கவினுக்கும் உள்ள உறவு குறித்து விளக்கி சுபாஷினி வீடியோ வெளியிட்டு உள்ளார். தானும் கவினும் உண்மையாக காதலித்ததாக சுபாஷினி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதலை கொன்னு புதச்சிடாதீங்க! ஆணவ படுகொலையை சுட்டிக்காட்டி சீமான் ஆதங்கம்..!
தனக்கும் கவினுக்குமான உறவு குறித்து தெரிந்ததும் சுர்ஜித் தனது தந்தையிடம் கூறியதாகவும், காதலித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என தனது தந்தையிடம் இல்லை என கூறிவிட்டதாகவும் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
செட்டில் ஆவதற்கு சிறிது காலம் தேவைப்படுவதாகவும் ஆறு மாத காலம் கழித்து கூறிவிடு என்று கவின் சொன்னதாகவும் கூறிய சுபாஷினி அதற்காக தான் அவரை காதலிக்கவில்லை என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.
சுர்ஜித் கவினை தொடர்புகொண்டு பெண் கேட்க வருமாறு அழைத்ததாக தெரிவித்தார். உங்கள் திருமணத்தை என் வாழ்க்கையை முடிவு செய்ய முடியும் என திருமண ஆசை காட்டி கவினை சுர்ஜித் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
கவின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக கவின் தாய் மற்றும் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு தான் கவிதை காணவில்லை என்பதை உணர்ந்து அவரை அழைத்ததாகவும், தெரிவித்தார்.
எனது தாய்க்கும் தந்தைக்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தனக்கும் கவினுக்குமான உறவை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் வீடியோவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: FIR போட காவல்துறைக்கு என்ன தயக்கம்? ஆணவ படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது... திருமா பேட்டி..!