கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து கேரள மாணவி தற்கொலை செய்த விவகாரம். தலைமறைவாக இருந்த கல்லூரி முதர்வர் கைது.
கேரள மாநிலம், வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சிலி (21) இவர் கருங்கல் அருகே மூசாரி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், விடுதியில் தங்கி 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இவரை, கல்லூரி முதல்வர் சக மாணவிகள் முன் கண்டித்தாராம். உடனே ஆன்சிலி கல்லூரியின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்துள்ளார்.
பலத்த காயமடைந்த அவரை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கல்லூரியில் செல்போன் பயன்படுத்தியதாக கூறி நர்சிங் கல்லூரி முதல்வர் ஷீஜா மாணவிகள் பலர் முன்னிலையில் திட்டியதால் அவமானம் தாங்காமல் தனது மகள் தற்கொலை செய்ததாக கூறி மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஷீஜா மீது, கருங் கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு பெத்லகேம் தனியார் நர்சிங் கல்லூரி ஹாஸ்டலில் தரமற்ற உணவு வழங்கியதால் மாணவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்அப்போது, மாணவி ஆன்ஸிலி சக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தியதாகவும், அதுகுறித்து பேசியதாலும் கல்லூரி நிர்வாகம் அவரை வேண்டும் என்றே தொடர்ந்து டார்கெட் செய்து டார்ச்சர் செய்து வந்ததாகவும் மாணவர்கள் மத்தியில் கூறப்படது.
இதையும் படிங்க: கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!
பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப் பட்டு சொந்த ஊரில் மாணவியின் இறுதி சடங்கு நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி தற் கொலை செய்துகொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஷீஜா தலைமறைவு ஆனார். அவரை போலீசார் தேடினர்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் கல்லூரி முதல்வர் ஷீஜாவை கைது செய்து கருங்கல் பகுதிக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேரவையில் இன்று ஹாட் டாபிக்..! சுற்றுலா, நீர்வளத் துறை குறித்து கடும் விவாதம். ! அடுக்கடுக்கான கேள்விகள்..!!