×
 

உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த கொலையாளிகள்...சென்னை அண்ணா நகரில் பீக் அவர் டிராபிக்கில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை..

தனது நண்பனை கொலை செய்த ரவுடி கும்பலை வெட்டி சாய்க்க காத்திருந்த ரவுடி ராபர்ட் என்பவரை அதே கும்பல் பீக் ஹவர் டிராபிக்கில் அண்ணா நகரில் பலர் முன் வெட்டி கொன்றது. அதற்கு முன் அயனாவரத்தில் ஒரு பெண்ணை அதே கும்பல் வெட்டியது. 

தனது நண்பனை கொலை செய்த ரவுடி கும்பலை வெட்டி சாய்க்க காத்திருந்த ரவுடி ராபர்ட் என்பவரை அதே கும்பல் பீக் ஹவர் டிராபிக்கில் பலர் முன் வெட்டி கொன்றது. அதற்கு முன் அயனாவரத்தில் ஒரு பெண்ணை அதே கும்பல் வெட்டியது. 

சென்னை அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் எட்வின் பூங்கொடி. இவர்களுக்கு சின்ன ராபர்ட் , ஜோசப், மோசஸ், ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ராபர்ட் உள்ளிட்ட மூன்று பேரும் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளனர். இதில் ராபர்ட் மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சத்யா நகர் முதல் தெருவில், நியூ ஆவடி சந்திப்பில் செல்போன் பேசிக் கொண்டிருந்த ராபட்டை முகமூடி அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்தது.

இதில் நிலைகுலைந்த ராபர்ட் தப்பி ஓட முயன்றும் முடியவில்லை. அவரை வெட்டி சாய்த்த கும்பல் உயிர் பிரிவதை ரசித்து பார்த்தப்படி நின்றது. மாலை 6 மணி அளவில் நட்ட நடு சாலையில் நடந்த கொலையால் அப்பகுதி வாகன ஓட்டிகள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராபர்ட் இருக்கும் அயனாவரத்தை சேர்ந்த ரவுடியான லோகுவுக்கும் கௌசிக்குக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: சூட்கேஸில் பெண்ணின் சடலம்.. நாடகமாடிய தாய் - மகள் கைது..! சிக்கியது எப்படி?

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு ராபர்ட்டின் நண்பரான கோகுலை லோகு கும்பல் வெட்டி சாய்த்து இருக்கிறது. நீண்ட நாட்களாக லோகு கும்பலை வெட்டி சாய்க்க வேண்டும் என நேரம் பார்த்து காத்திருந்த ராபர்ட்டை தற்போது ரவுடி லோகு கோஷ்டியினர் வெட்டி சாய்த்து இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பி கேட்டகிரி ரௌடியாக இருந்த ராபர்ட்டை  அதிக குற்றச்செயலில் ஈடுபடுவதால் ஏ கேட்டகிரி ரவுடியாக மாற்றி உள்ளனர். ராபர்ட் அன்னை சத்யா நகரில் பல்வேறு குற்ற செயல்களிலும், தொடர்ந்து கோஷ்டி மோதலிலும் இருந்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. 

சம்பவம் இன்று மாலை ஆறு மணி அளவில் நடந்திருக்கிறது பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது வெட்டி சாய்த்த மர்மகும்பல் சாவகாசமாய் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று இருக்கிறார்கள் ராபர்ட்டை வெட்டி சாய்ப்பதற்கு முன்பு இதே கும்பல் அயனாவரத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணிடம் சென்று அவரது மகன் குறித்து கேட்டுள்ளது. அவர் சரியாக பதிலளிக்காததால் ஆத்திரத்தில் அவரை வெட்டி விட்டு அதன் பிறகு நியூ ஆவடி சாலை வந்து அங்கிருந்த ரவுடி ராபர்ட்டை வெட்டி கொலை செய்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் கஞ்சா மதுபோதை, ரவுடியிசம் காரணமாக பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் உள்ளது. ரவுகளுக்கு போலீஸ் குறித்தோ, நீதிமன்றம், தண்டனை குறித்தோ பயம் இல்லை. ரவுடிகளுக்கு அவர்கள் பாஷையில் பதிலளிக்கப்படும் என்று காவல் ஆணையர் பேசினார். ஆனால் ரவுடிகள் எதற்கும் அஞ்சும் ரகமாக தெரியவில்லை. நுண்ணறிவுப்பிரிவு போலீஸார், எஸ்பிசிஐடி போலீஸார் ரவுடிகள் கண்காணிப்பு குழுவினர் பணிகள்,  இதுபோன்ற கொலைகளால் கேள்விக்குறியாகியுள்ளது. 
 

இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை சிக்கன் வாங்கி கொடுத்தும், சமைக்காத மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது; பரிதவிக்கும் 3 குழந்தைகள் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share