வாக்காளர்களே.. உங்களுக்காக..!! உங்கள் வாக்குச்சாவடி எதுன்னு தெரிஞ்சிக்கணுமா..??
வாக்களிக்க செல்வோருக்கு பூத் ஸ்லிப் என்ற வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் இந்த முறை 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அதில் ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர், பெண்கள் 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர், மேலும் 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர்களாக உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், கடந்த தேர்தல்களைப் போலவே அதிகளவில் வாக்காளர்கள் பங்கேற்றால், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் 85-ஐ மீறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி விவரங்களை பல்வேறு முறைகளில் அறிந்து கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், மொபைல் செயலிகள் மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம் பாகம் எண், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கலாம். வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!
வாக்குச்சாவடிக்குள் செல்போன், கேமரா போன்ற மின்சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதற்காக தனி வசதி ஏற்படுத்தப்பட்டு, செல்போன்களை ஒப்படைத்து டோக்கன் பெறும் முறையும் நடைமுறையில் இருக்கும். மேலும், இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயருடன் அவர்களின் நிறப் புகைப்படங்களும் இடம்பெறும் என்பது வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை துறையினருக்கு தபால் ஓட்டு வசதி செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு ‘பூத் ஸ்லிப்’ வழங்கப்படுகிறது. இதில் உள்ள கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். பூத் ஸ்லிப் கிடைக்காதவர்கள் தேவையான விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: விசிக வேட்பாளர் பட்டியல் 2026: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி!