திருமாவின் அரசியல் வாழ்வு எப்படிப்பட்டது தெரியுமா? கமல்ஹாசன் நெகிழ்ச்சி
திருமாவின் அரசியல் வாழ்க்கை தொடர்பாக கமல்ஹாசன் எம் பி நெகிழ்ச்சிப்பட பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், திருமாவளவனின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு என்பது சாதாரணமானது கிடையாது என்று தெரிவித்தார். பல தழும்புகள் அதில் இருப்பதாகவும் சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக ஒரே மக்களாக இணைய முடியும் என்று கூறிய கமல்ஹாசன், ஒரே மக்களாக இணைய முடியும் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மையப்படுத்துவது எளிதான காரியம் கிடையாது எனவும் தெரிவித்தார்.
அவர்களை அரசியல் மையப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள் என்றும் அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள் அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறினார். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது என்பது எவ்வளவு சிரமம் என்பது தனக்கு தெரியும் என்றும் அரசியலில் அங்கீகாரம் பெறுவதை சிரமம் தன்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கேள்வி கேட்டாலே தேச விரோதி முத்திரை குத்துவீங்களா? கனிமொழி சரமாரி கேள்வி..!
சாதிதான் தன்னுடைய முதல் எதிரி என்று கூறிய கமல்ஹாசன், என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதைத்தான் பதிலாக சொல்கிறேன் என்றும் பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது என்றும் நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை எனவும் கூறினார்.
ஒரு சமுதாயத்தை முன்னேற்றத்தை பெண்களை முன்னேற்றத்தை வைத்து தான் அளவிட முடியும் என அம்பேத்கர் கூறி இருப்பதாகவும் பெண்களுக்கு உரிமை தொகை கொடுக்க வேண்டும் என முதலில் கூறியது தங்கள் கட்சி தான் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி.. கட்டுக்கடங்காத குழப்பம்! 3வது நாளாக முடங்கிய அவை நடவடிக்கைகள்..!