ரெய்டு... ரொம்ப பெருமையா இருக்கு..! K.N. நேரு மகிழ்ச்சியாக பேட்டி..!
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக கே.என். நேரு பேட்டி அளித்தார்.
திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம் உள்ளிட்ட சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய சுமார் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் உள்ளிட்டோர் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சோதனைக்குப் பின்னர் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கே.என்.நேரு, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். அதிகாரிகள் தனது சகோதரரின் வருமானம் மற்றும் செலவுக் கணக்குகள் தொடர்பான வழக்கமான ஆவணங்களை மட்டும் கைப்பற்றியதாகக் கூறினார்.
நகராட்சி நிர்வாகத் துறையில் முந்தைய திமுக ஆட்சியின் போது ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இந்தச் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால் ஒப்பந்தங்கள் தொடர்பாக தான் யாரிடமும் பேசியதில்லை என்று அவர் மறுத்தார்.சட்டமன்றத்தில் அடிக்கடி ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்வி கேட்பதால் ரெய்டா என நிருபர்கள் நீங்களே கேட்பது எனக்கு பெருமையா தான் இருக்கு எனவும் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!! நைசாக நழுவிய செங்கோட்டையன்..!
இருக்கலாம் என்றும் அரசியல் ரீதியாக பார்த்தால் எங்களை மிரட்டி வைக்கும் முயற்சியாக இது இருக்கலாம். ஆனால், ரெய்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எங்கள் கடமை. ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நீடித்த சோதனையின் போது முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சட்டமன்றம் இல்ல... சினிமா மன்றம்..! தவெக ஆட்சி நிலைக்காது..!! EPS திட்டவட்டம்..!