×
 

கை நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்ட இபிஎஸ் சொத்து வரி பத்தி பேசலாமா! அமைச்சர் நேரு பதிலடி...

அதிமுக ஆட்சியில் கையெழுத்து போட்டுவிட்டு சொத்து வரி உயர்வை பற்றி பேச அதிமுகவுக்கு அருகதை இருக்கிறதா என அமைச்சர் கே.என் நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

சொத்து வரி உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து இருந்தார். அலங்கோல திமுக ஆட்சி என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் கே. என் நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

அன்னியன் திரைப்படத்தில் வருவது போல் அம்பி, ரெமோ என இபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறார் என்றும் ஓலை குடிசைகள், ஓட்டு வீடுகள் கூட பல மடங்கு சொத்துவரி உயர்த்தப்பட்டதாக இபிஎஸ் பச்சை பொய் பேசி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசு கடும் நிபந்தனை விதித்த போது சுயநலத்துக்காக இபிஎஸ் கையெழுத்திட்டதால் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது என்றும் கைநீட்டிய இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்டதால் தான் மத்திய அரசு பிடியில் சிக்கித் தவிக்கிறோம் என்றும் அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்தார்.

இதையும் படிங்க: வதந்திகளை நம்பாதீங்க மக்களே..! கையிருப்பு அதிகமாக இருக்கிறது.. மத்திய அரசு விளக்கம்..!

மேலும், இபிஎஸ் கையெழுத்திட்டதால் 15ஆவது நிதியாணையம் சொத்துவரி உயர்வு கட்டாயமானது என்றும் அமைச்சர் கே. என் நேரு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: உங்கள் அர்ப்பணிப்பு நம் உறவை வலுப்படுத்துகிறது.. பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share