ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!
கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் இரண்டு நாட்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியான கொடைக்கானலில், வனத்துறை நிர்வாகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள் போன்றவை ஆகும். இவை அனைத்தும் இயற்கை அழகுக்கு பெயர் பெற்றவை. பொதுவாக இந்த இடங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2025 செப்டம்பர் மாதம் முதல், இந்த நான்கு இடங்களுக்கும் ஒரே ஒரு டிக்கெட் மூலம் அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி பெரியவர்களுக்கு ரூ.30, குழந்தைகளுக்கு ரூ.20, வெளிநாட்டினருக்கு என தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கார் போன்ற வாகனங்களுக்கு தனியாக பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டண முறை QR கோடு அல்லது UPI மூலம் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என 2026 ஜனவரி மாதம் முதல் அறிவிக்கப்பட்டது.
இதன் நோக்கம், கட்டண வசூலை ஒழுங்குபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதும், வனப் பகுதிகளைப் பாதுகாப்பதுமாகும். இதற்கிடையில் ஆன்லைன் கட்டண முறையை திரும்பப் பெற வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் காலை முதல் போராடி வந்தனர். 4ம் தேதி முதல், கொடைக்கானலில் 5 இடங்களில் வரிசையில் நிற்காமல் உடனடியாக QR CODE மூலம் டிக்கெட் பெறும் நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் ஜாலி வாக்கிங்..!! முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட மக்கள்..!! ஒரே செல்ஃபி க்ளிக்ஸ் தான்..!!
அதுமட்டுமல்லாமல், கொடைக்கானலில் கூட்டம் அதிகரிப்பதால், பில்லர் ராக், குணா குகை, பைன் மர சோலை உள்ளிட்ட பகுதிகளை இரு நாட்களுக்கு கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (04.05.2026) வழக்கம் போல QR குறியீடு மூலம் நுழைவு கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!