ஒரே இடத்தில் ஒன்றுகூடி நிற்கும் வாடகை கார் ஓட்டுநர்கள்... 5 மணி நேரத்திற்கும் மேலாக கொடைக்கானலில் பரபரப்பு...!
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வராத வனத்துறை அதிகாரிகளால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்து உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
6 மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு சுற்றுலாத்தலங்கள் தனித்தனியாக இடத்தில் நுழைவு கட்டணம் பணம் மூலமாக பெறப்பட்டு கொண்டிருந்தது. தற்போது ஆன்லைன் மூலமாக மாற்றப்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் விதமாக அமைந்துள்ளதால் கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள 1000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை அகற்ற இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் வாகன ஓட்டுனர்கள் சார்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே இந்த சுங்கச்சாவடியை அகற்றுவதற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் வனத்துறையினர் இவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காத காரணத்தினால் அனைத்து வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி காலை 7 மணி முதல் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழலில் வனத்துறை கட்டப்பட்டில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடும் அமைதி அடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!
மேலும் இந்த சுங்கச்சாவடியை இடமாற்றாமல் இருந்தால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக நீடிக்கும் அதை போல் கோலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் பெரும் அவதி அடைவதால் என மாற்ற வேண்டும் என வாகன ஒட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
6 மாதங்கள் முன்பு ஒவ்வொரு சுற்றுலா தளங்களுக்கு தனித்தனியாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது அதேபோல் மீண்டும் வசூலிக்க வேண்டும் என கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முடிந்தது சுற்றுலா!! சென்னை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்! வழிநெடுக திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!