×
 
☰

"இனி நோ டென்ஷன்"..! கொடைக்கானலில் மல்டி லெவல் கார் பார்க்கிங்..! தமிழக அரசு திட்டம்..!!

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானலில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும், வாகனங்களை நிறுத்த இடப்பற்றாக்குறையும் நீண்டகாலமாகப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதற்குத் தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் 7.59 ஏக்கர் நிலத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகமும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் தங்கள் வாகனங்களை எளிதாக நிறுத்திவிட்டு நகரத்தில் சுற்றிப் பார்க்க முடியும். போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, வாகன நிறுத்துமிடம் தேடி அலைவதும் தவிர்க்கப்படும்.

மேலும் வணிக வளாகம் அமைக்கப்படுவதால் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசத்தில் சாலைகள் குறுகியதாக இருப்பதால் வாகன நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக சுற்றுலாக் காலங்களில் இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடைகிறது.

இதையும் படிங்க: சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

இதனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது நகரத்தின் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதோடு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் உதவும் என நம்பப்படுகிறது.இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொடைக்கானலின் போக்குவரத்து சூழல் கணிசமாக மேம்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான சூழல் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: பக்தர்களுக்கு ஷாக்..! சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி ரத்து..! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share