பொண்டாட்டி சொன்னா கேட்கணும்... திருமண ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...!
15 இணையருக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின் பொண்டாட்டி சொன்னா கேட்கணும் என அறிவுரை வழங்கினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் 25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மண்டபம் கட்டப்பட்டது. குளிர் ஊட்டப்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருமண மாளிகையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, 15 இணையருக்கு திருமணம் நடத்தி சீர்வரிசை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தினார். தொடர்ந்து விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். பொண்டாட்டி சொன்னா கேட்கணும் என புதுமன தம்பதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
என்னுடைய வெற்றிக்குப் பின் இருப்பது எனது மனைவிதான் என்றும் தெரிவித்தார். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது பெண் தான் என்றும் என் வெற்றிக்கு பின்னால் இருப்பதும் பெண்தான் எனவும் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே எனர்ஜி வந்துவிடும் என்றும் புத்துணர்ச்சி வந்துவிடும் என்றும் தெரிவித்தார். மணமக்களோடு இந்த விழாவில் பங்கேற்று இருப்பது உற்சாகத்தை தருகிறது என்று கூறினார்.
கொளத்தூர் தொகுதியை பார்க்கும்போது பிரதிநிதிகளுக்கு நல்ல விதத்தில் பொறாமை ஏற்படுகிறது என்று தெரிவித்தார். ஒரு மாவட்டத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செல்லும் நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் 10 நாளுக்கு ஒருமுறை வருவதாக கூறினார். அனைத்து தொகுதிகளும் நம்முடைய தொகுதி தான் என்றும் எல்லோருக்கும் எல்லாம் என்று பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதி மக்களின் வரவேற்பு தான் அதிக மகிழ்ச்சியை தருவதுண்டு என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சொந்தத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்... வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டின் சிறப்பிப்பு...!
பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் தான் திருப்தியாக உள்ளது என்று கூறினார். சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த மக்களை பார்த்தவுடன் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். எப்போதும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, செல்லப்பிள்ளை, நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி இருப்பதாகவும், கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு என்றும் அதிகமான நகராட்சி பள்ளிகள் உள்ளன எனவும் தெரிவித்தார். அதிக நூலகங்கள், மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர் தொகுதி என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எத்தனை தொகுதிகள் எங்களுக்கு? முதல்வர் ஸ்டாலினோடு காங்கிரஸ் ஐவர் குழு டிஸ்கஷன்!