#BREAKING: மூவரும் குற்றவாளிகளே..!! கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது.
கோவையில் ஒரு கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் கடந்த 2025 நவம்பர் 2-ம் தேதி இரவு நடந்தது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அன்றிரவு அவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிருந்தாவன் நகர் என்ற பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் இரவு சுமார் 11 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், ஆண் நண்பரை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி விட்டு மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறையில் இருந்த மூன்று பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.
இதையும் படிங்க: மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!
குற்றவாளிகள் சதீஷ், கார்த்தி, தவசி ஆகியோர் முகமூடி அணிந்தபடி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். மாணவிக்கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் அதிரடி தீர்ப்பை வழங்கினார். கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உள்ள மூன்று பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி எஸ்கேப் ஆகவே முடியாது..!! கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வரப்போகுது ஹைடெக் மாற்றம்..!! என்ன தெரியுமா..??