“கருப்பு மஞ்சளை கலக்கி பாரு காவி வருது சித்தப்பு...” - தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த கோவன்...!
தவெக நதக காவிகளின் பிடீம் சிடீம் திமுகவை விட்டால் தமிழுக்கு விடியல் இல்லை
1891 ஏப்ரல் 29ல் பிறந்த பாரதிதாசனின் பிறந்தநாள்விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாக கொண்டாடிவருகின்றனர் அந்த வகையில் மயிலாடுதுறையில் பகுத்தறிவாளர்கழகத்தினர் நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள்விழாவில் மக்கள் கலை இலக்கிய கழக புரட்சிப் பாடகர் கோவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை முற்றிலும்புறக்கணிக்கவேண்டும் என்பதால் நான் முதன்முதலாக வாக்களித்தேன் காவி பாசிசம் என்ற சனியன் வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுகவிற்கு வாக்களித்தேன். தமிழ் மொழியை அழிப்பதற்கு பாஜக துடிக்கிறது, தாய்மொழியைஅழித்து இந்தியை கொண்டுவர துடிக்கிறது, அதற்காக கல்வி நிதியில் கைவைத்தது, ரூ.10 ஆயிரம்கோடி கொடுத்தாலும் நான் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டேன் என்றார் முதல்வர்ஸ்டாலின். பாண்டிச்சேரியில் மும்மொழிக் கொள்கை வந்துவிட்டது, மராட்டிய மாநில துணை முதல்வர் உத்தவ்தாக்கரே தம் மராட்டிய தாய்மொழியை எடுத்துவிட்டு இந்திமொழியை கொண்டுவந்தால், தாய்மொழியைக் காப்பதில் தமிழகத்தின் திமுக போராட்ட நிலைப்பாட்டை கையாள்வேன் என்று கூறியுள்ளார்.
உஷாரு உஷாரு தவெக உஷாரு, திராவிட கொள்கையைப் பேசி நடிச்சாரு எம்ஜியாரு, ஆனால் பெரியாரு கட்டவுட் தமிழ்நாடு உஷாரு சங்கி பேக்ரவுண்டு கட்சி பொதுச்செயலாளரு, ஊழல் ஒழிப்பிண்ணு ஒவர்பில்டப்பு ரசிகரு ஷோவுக்கு ஆயிர ரூபா டிக்கெட்டு, கருப்பு மஞ்சளை கலக்கி பாரு காவி வருது சித்தப்பு என்று தவெகவின் நிலைப்பாட்டை நையாண்டியாகப் பாடினார், பேனரில் பெரியாரை காட்டிவிட்டால் தவெகவை நம்பலாமா பாஜகவின் பிடீம் நாம்தமிழர் கட்சி, சி டீம் தமிழக வெற்றிக்கழகம், , ஒருங்கிணைப்பது எடப்பாடி டீம் ஆகும் என்றார்.
நான் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என தள்ளாடியபடியே கூறும் தலைவர் பார்ப்பன கடப்பாறைக் கொண்டு திராவிடத்தை வீழ்த்துவேன் என்கிறார். இந்த நடிகரோ நண்பா, நம்பி, புரோ என்ன இது என்ன கலாச்சாரம் தற்குறி கட்சிகளுக்கு தமிழ் வரலாறுதெரியுமா, 1969ல் நோய்தாக்கி சாவின் விளிம்பில் இருந்த அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர்சூட்டும் விழாவில் கலந்துகொள்ளவேண்டாம் ஓவ்வெடுங்கள் என்றதற்கு அண்ணா கூறும்போது, அடைந்த வெற்றியை இணைந்து கொண்டாடுவோம் என்று சிறப்பித்த வரலாறு கொண்டது இந்ததமிழ்நாடு.
தாய்தமிழுக்கு தாய்வீடு தமிழ்நாடுதான் அடையாளம், அதனை இழக்க ஒருபோதும் விடமாட்டோம். என உரையும் பாடலுமாக எழுச்சி உரையாற்றினார்.
இதையும் படிங்க: அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஜய்..? வரலாறே இல்ல..! அடித்து சொல்லும் கடம்பூர் ராஜூ..!
இதையும் படிங்க: தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!