×
 
☰

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து சிறுவர்கள் மாயம்? பெற்றோர் மத்தியில் கவலை..!!

கிருஷ்ணகிரி மேலும் ஒரு சிறுவன் மாயமான நிலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 15 வயது மகன் அஸ்வின் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று மாலை பள்ளிக்கு சென்று வீட்டிற்க்கு திரும்பி மாணவனை அவரது தாய் மாணவனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுவனை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால் காலை காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மாணவன் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே தனியாக திம்மாபுரம் நோக்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர். சிறுவனை காணாது அவரது பெற்றோர் தவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அட பாவிங்களா.! "கோபுர கலசங்கள் திருட்டு"..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!!

ஏற்கனவே ஊத்தங்கரை அடுத்த சிங்காரபேட்டை பகுதியில் 12 வயது சிறுவன் டியூசன் செல்வதாக கூறி லிப்ட் கேட்டு மாயமான நிலையில் தற்போது காவேரிப்பட்டினம் பகுதியில் 15 வயது சிறுவன் மாயனதால் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பயிற்சியின்போது நடுவானில் மோதிய பிலிப்பின்ஸ் ராணுவ விமானங்கள்! 4 விமானிகள் பலி! உறைய வைக்கும் காட்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share