×
 

கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசையா.? டாஸ்மாக்கை விட்டொழி..! கிருஷ்ணசாமி தாக்கு.!!

டாஸ்மாக் விவகாரத்தில் தவெக அரசைக்கு கிருஷ்ணசாமி அறிவுரை வழங்கினார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, விஜய் தலைமையிலான அரசை நோக்கி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். விஜய் அரசே, டாஸ்மாக்கை விட்டொழியுங்கள் என்றும் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடிவிடுவதாக வாக்குறுதி அளித்து பதவி ஏற்றவர்கள், இப்போது அதற்கு நேர்மாறாகப் பேசத் தொடங்கியுள்ளனர் என்று கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார்.

ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டுமென்றால் சில இழப்புகளைத் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அரசுக்கு வரும் ரூபாய் 55,000 கோடி வருமானத்தை இழக்க மனமில்லாமல், டாஸ்மாக் கடைகளை மூடத் துணிவும் இல்லாமல் திண்டாடுகிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.டாஸ்மாக் உற்பத்தி முதல் காலி பாட்டில் விற்பனை வரை எல்லா நிலைகளிலும் ஊழல் வேரூன்றியுள்ளது என்பதை கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினாலும் கடை வாடகை, மின்சாரக் கட்டணம், துப்புரவுப் பணி போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. சிறுசிறு காரணங்களுக்காக ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வது எந்த வகையிலும் தீர்வாகாது என்று அவர் தெரிவித்தார்.டாஸ்மாக் மனித உடலுக்கும், குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெரும் கேடு விளைவிப்பது மட்டுமல்ல என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

ஊழலின் முக்கிய ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகிறது என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். “விஜய் அவர்களே, டாஸ்மாக்கை முற்றாக விட்டொழிப்பதே சரியான தீர்வு. கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசை கொள்ளாதீர்கள்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க: 2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share