செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!
கரூர் சம்பவத்திற்கு கூட்ட நெரிசல் தான் காரணம் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் உற்சாகமாக நடத்தி வந்தார். அவரைக் காண அலைக்கடலென மக்கள் குவிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தது. கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூர் சம்பவத்திற்கு கூட்ட நெரிசல் தான் காரணம் என்று தெரிவித்தார்.
தான் கரூருக்கு சென்றிருந்ததாகவும், கரூரில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்த்ததாகவும் தெரிவித்தார். அதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தான் அசம்பாவிதம் நிகழ்ந்ததாக தெரிவதாக கூறிய அவர், யாரும் தூண்டிவிட்டு செயல்பட்டதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூடுதல் தொகுதி விவகாரம்... பசிக்கு சோறு கேட்பது தவறா?... கே.எஸ்.அழகிரி கேள்வி..!
செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்துவதாகவும், கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி, முதலமைச்சர் ஸ்டாலின் என யாரையும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர் என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரை உற்று நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாறு அவங்களுக்கு... சக்கை எங்களுக்கா? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு! பகீர் கிளப்பிய அழகிரி