இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனரக லாரியில் கனிம வளம் ஏற்றி செல்ல இன்று முதல் தடை விதிப்பு.மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்திற்கு கனிம வளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் குமரிமாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.தொடர்ச்சியாக கனிமம் ஏற்றி செல்லும் அதிவேக வாகனங்களால் குமரி மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.
நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்றாட சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்டமானது சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக அமைவதாலும், மாற்று வழி இல்லாததாலும் மார்த்தாண்டம் மேம்பாலப் பகுதி உட்பட நாகர்கோவில் -களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கடக்கும் போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, கனிம வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் விபத்தில்லா சாலை போக்குவரத்தை உறுதிபடுத்துவது என்பது மிகவும் அவசியம் ஆகிறது.மேலும் கனரக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன மூலம் ஓட்டுநர்கள் வாகனங்களை அதி வேகமாக இயக்குவதால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக உள்ளது. பல முறை உத்தரவுகள் வழங்கியும் அவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை.
இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!
எனவே பொதுமக்களின் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் வரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமங்களை கனரக வாகனங்களின் மூலம் ஏற்றிச் செல்ல இன்று முதல் தடை விதித்து ஆணையிடப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!