எனக்கு குடுக்கல..! ரூ.8000 மாதிரி கூப்பனால் தகராறு..! பெண் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!
திருச்சியில் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கள் சின்னத்தை அடையாளப்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் கட்சி சார்பில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை முன்னிறுத்தி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், தி.மு.க தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கி, அதன் மூலம் டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைத் தங்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளலாம் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம், தி.மு.கவின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக மாறியது. இந்த நிலையில், 8000 ரூபாய் கூப்பன் மாதிரி வழங்கி வாக்குச் சேகரித்த வருகின்றனர். இதனிடையே, திருச்சி மண்ணச்சநல்லூரில் தனக்கு ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்கவில்லை என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவிக்கு வெட்டு..! ரத்த வெள்ளத்தில் துடிக்க வைத்த திமுக அரசு..! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!!
அப்போது, தி.மு.க-வினர் தன்னை ஆபாசமாக பேசி தாக்கியதாக சிந்துஜா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசி தாக்கிய தி.மு.க-வினரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி - லால்குடி சாலையில் சிந்துஜாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!