ஒவ்வொரு மாசமும் EMI கட்டுறேன்! விவசாய நில வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை...
விவசாய நிலத்தை வாங்கியது குறித்து வதந்தி பரவிய நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான் என்றும் நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியதாக தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களாக, தனதுவங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருவதாக கூறினார். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு, தனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ. 40,59,220 செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்து உள்ளதாகவும், அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லியில் முகாமிட்ட பாஜக தலைகள்! அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங்... என்னவாம்?
இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருவதாகவும் சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள் என்றும் குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா” - அண்ணாமலைக்கு சப்போர்ட் செய்த நயினார் நாகேந்திரன்... திமுக உ.பி.க்கள் கதறல்...!