×
 

மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் ஹிந்தி அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் போராட்டம் செய்து போது அடிபட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது படுகாயமடைந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த தீவிரத் தொண்டர் சிவா (எ) சிவக்குமார், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத் தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 11, 2026 அன்று, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் ஹிந்தி அழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக மே 17 இயக்கம் சார்பில் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது, உணர்ச்சிவசப்பட்டு தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறிக்க முயன்ற சிவக்குமார் மீது எதிர்பாராதவிதமாக ரயில் மோதியது. இதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சிவக்குமாரின் மறைவுக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். "மொழிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த ஈகி சிவக்குமாருக்கு வீரவணக்கம்" எனத் தமிழ் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சமீபகாலமாக மத்திய அரசின் பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்புகளில் ஹிந்தி மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறி பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, தபால் துறை மற்றும் ரயில்வே தேர்வுகளில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆந்திராவில் பெரும் சோகம்... கலப்பட பால் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share