×
 

தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

தவெகவில் இணைந்தவருக்கே தவெக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும், சட்டமன்றம் சினிமா பார்ட்-2 அல்ல என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர், செப். 06: கட்சியில் பாதுகாப்பு வேண்டும் என்று தவெகவில் இணைந்த நபரே சென்னையில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தலைநகரிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில் காவல் துறையைக் கையில் வைத்துள்ள முதல்வர் விஜய் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிக்கு வந்து வெறும் 100 நாட்களே ஆன நிலையில் அடுத்த பிரதமர் யார் என விவாதிப்பது அறியாமை என்றார். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம், விவசாயக் கடன் சுமை, சம்பா சாகுபடி தண்ணீர் தட்டுப்பாடு, ரூ.30,000 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட அரசுக்கடன் மற்றும் டாஸ்மாக் முறைகேடுகள் எனப் பல பிரச்சினைகள் நிலவும் போது, அதைத் தீர்க்காமல் தவெகவும் காங்கிரஸும் பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேச தார்மீக உரிமையற்றவர்கள் என்று சாடினார்.

இதையும் படிங்க: மழையில் நனையும் நெல்மணிகள்.. உடனே கொள்முதல் செய்க! பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!

மேலும், சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மாண்புமிகு களம் என்றும், அது திரைப்படத்தின் இரண்டாம் பாகமோ (Part-2) அல்லது சீரியலோ அல்ல என்றும் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். அத்துடன், தொகுதி மறுவரையறை வந்தால் தமிழகத்திற்கு கூடுதலாக 20 எம்.பி. தொகுதிகள் கிடைக்கும் என்பதால் அதனை எதிர்க்கக் கூடாது என்றும், நீட் விவகாரத்தில் கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share