வாட்டும் புத்திர சோகம்!! தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா?! மெடிக்கல் ரிப்போர்ட்!
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜாவுக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் திரைத்துறையின் முக்கியமான படைப்பாளியுமான பாரதிராஜா உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
'சிவப்பு ரோஜாக்கள்', 'கிழக்கு சீமையிலே', 'முதல் மரியாதை', 'வேதம் புதிது' போன்ற படைப்புகளால் தமிழ் சினிமாவுக்கு புதிய திசையை காட்டிய இயக்குனர் பாரதிராஜா, கடந்த மார்ச் மாதம் தனது மகன் மனோஜ் மறைவால் பெரும் மன வேதனை அடைந்தார்.
அதனால் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவருக்கு வீசிங் போன்ற சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: துபாயில் துயரம்!! அபுதாபி கார் விபத்து! குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!
அப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நுரையீரல் தொற்று கடுமையாகியுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாரதிராஜாவின் உடல்நிலை குறித்த செய்தி வெளியானதும் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் கவலையடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வர வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவுக்கு பல சிறந்த படைப்புகளை அளித்த பாரதிராஜா விரைவில் நலம் பெற வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! முன்னாள் காதலன் வெறிச்செயல்!