×
 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் அதிரடி.. இரு தந்தை, இரு மகன்களுக்கு ஆயுள் தண்டனை...!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் இரு தந்தை, இரு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார் கோயில் ஒன்றியம் சிறுவயல் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (55) இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். அந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கட்டுவதில் முனியசாமி தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் 2018 ஆம் ஆண்டு முனியசாமியை மற்றொரு தரப்பினரை சேர்ந்த தந்தை வேலு, 58,. இவரது மகன் செந்தமிழ் செல்வன் (30), அருமைதுரை (60) அவரது மகன் ரமேஷ் (35) பாலுச்சாமி (68) முனியசாமி (68) ஆகிய 6 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், அருவாளால் வெட்டியும் கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நயினார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் நடந்தது. அதில் தந்தைகள் வேலு, அருமைதுரை இவர்களின் மகன்கள் முறையே செந்தமிழ் செல்வன், ரமேஷ் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை என்று கூறினார். பாலுச்சாமி, முனியசாமி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர் குற்றவாளிகள் 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

இதையும் படிங்க: கோலி பத்தியா தப்பா பேசுனா.. நண்பனை பேட்டால் அடித்துக்கொன்ற வாலிபர்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share