×
 

சமூக நீதியா? அப்படின்னா என்ன தெரியுமா... முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த எல்.முருகன்!

தமிழ்நாட்டில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யாமல் விடுதிகளுக்கு பெயர் மாற்றுவதில் எந்த உபயோகமும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனிடையே, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை சென்று பாருங்கள்., அங்கு எந்த அளவுக்கு சிறப்பான விடுதிகளை அமைத்துக் கொடுத்து உள்ளோம் என தெரியும் என கூறினார்.

ஆனால், தமிழ்நாட்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத விடுதிகள் இருப்பதாகவும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிகள் வசதி சரியில்லை என சமீபத்தில் வீதியில் இறங்கி போராடியதாகவும் குறிப்பிட்டார். எந்த ஒரு வசதிகளும் செய்து கொடுக்காமல் இந்த போலி திராவிட மாடல் ஆட்சி, பெயர் மாற்றுவதில் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்றும் உண்மையாக மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் அக்கறை இருந்தால் பற்று இருந்தால் ஒவ்வொரு விடுதிகளுக்கும் சென்று அங்கு மேம்பாட்டிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

  

இன்னும் பல ஊர்களில் காலனி இருக்கிறது என்றும் தீண்டாமைகள் என்னும் தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும்., இவையெல்லாம் வைத்துக்கொண்டு சமூக நீதி விடுதிகள் என்று வெற்று அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியீட்டுள்ளதாகவும் கூறினார். தந்தையும் மகனும் விடுதிகளை நேரில் சென்று பார்த்துவிட்டு.,சமூகநீதி விடுதிகள் என்ற தெரிவித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், எதையுமே செய்யாமல் சமூக நீதி விடுதிகள் எனக் கூறுவது சிரிப்பாக உள்ளது என தெரிவித்தார்.

உதகையில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருப்பதாக கூறிய அவர், சிவகாசி பட்டாசு ஆலை விபத்துக்கள் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை தமிழக அரசாங்கம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்., அதில் தானும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருக்கிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை.. ஆணவத்தை நீடிக்க விட மாட்டோம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share