×
 
☰

இது என்னடா சென்னைக்கு வந்த சோதனை... சிங்கப்பெருமாள் கோவில் டு மகேந்திரா சிட்டி வரை ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை...!

அதிகப்படியான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

காலாண்டுத் தேர்வு மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை முடிவடைந்து, பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிலிருந்தும் சொந்த ஊர்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர் இதன் காரணமாக  சிங்கப்பெருமாள் கோவில் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு அரசுப் பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றபடி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

இன்று திங்கட்கிழமை என்பதால்  பள்ளி கல்லூரிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மீண்டும் இயங்கவுள்ளதால் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் திறப்பொழுது ஒரே நேரத்தில் சென்னை வைக்க படையெடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?

இதன் காரணமாக இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து மெர்சல் ஏற்பட்டுள்ளது ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தாலும் அதிகப்படியான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

மற்றொருபுறம் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே திருச்சி  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றன.  அங்கிருந்து சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் திருச்சி  சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருக்கும் மாநகரப் பேருந்து மூலம்  பயணம் மேற்கொள்கின்றனர். 

ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் வந்து இறங்குவதால் கிளாம்பாக்கம் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது. பயணிகள் தங்களின் இடங்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வருவதால் மாநகர பேருந்திற்கு காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: ஓஹோ..!! - இப்படியொரு கணக்கு இருக்கா?... வஞ்சியம்மன் கோவில் விசிட்.. முதல்வரின் ஆன்மீக வியூகம் வெல்லுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share