அசோக்குமாரை குறிவைத்த அமலாக்கத்துறை..! "லுக் அவுட் நோட்டீஸ்"..! எதிர்மனுத் தாக்கல்..!
லுக் அவுட் நோட்டீசுக்கு எதிராக அசோக் குமார் மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான போக்குவரத்துத் துறை அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற மோசடி வழக்கில், அவரது சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுத்து வரும் ஒன்று.
செந்தில் பாலாஜி 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலைகளுக்கு பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. பல இளைஞர்கள் தங்கள் கனவு வேலையைப் பெறுவதற்காக பெரும் தொகையை செலவழித்ததாகக் கூறப்பட்டது. இந்த மோசடியில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் முக்கியப் பங்கு வகித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அமலாக்கத்துறை இந்த வழக்கை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரித்தது. பண மோசடி மற்றும் அந்தப் பணத்தை சட்டப்பூர்வமாக்கியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அசோக்குமார் மீது நேரடியான குற்றச்சாட்டுகள் இருந்ததால், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.
இதையும் படிங்க: சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?
இந்த நோட்டீஸ் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அசோக்குமார் நாட்டை விட்டு வெளியேற முயன்றால் உடனடியாகக் கைது செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் அசோக்குமார் தலைமறைவான நிலை உருவானது. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்ததாகவும், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜரானதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்...! அடுத்தடுத்து அதிரடி..! அரசியல் அரங்கில் பரபரப்பு..!!